உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

கூடலுார்; கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நகர சுகாதார நிலையத்தில், 'சில்ட்ரன் சரிடேபிள்' அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணி பெண்கள், மகப்பேறு காலத்தில் பயன்படுத்த கூடிய உடைகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சுஜித் கண்ணா வரவேற்றார். சுகாதார நிலைய டாக்டர் கவுதம் தலைமை வகித்து, 'மகப்பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பிரசவ காலங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து அறக்கட்டளை சார்பில், 60 பெண்கள் மகப்பேறு காலத்தில் அணியக்கூடிய உடைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர் கவுசல்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை