உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

குன்னுார், ; 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல்,' என்ற கருப்பொருளின் கீழ், வரும் ஜூன், 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 'நீர்நிலைகள் பாதுகாத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, மரங்கள் நடவு செய்தல்,' என, பல தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், ஹோலி இன்னசென்ட் பள்ளி மாணவ, மாணவியரின், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பள்ளி முதல்வர் ஆவியாவாஸ் துவக்கி வைத்தார். எம்.ஆர்.சி., பேரக்ஸ் வழியாக வந்த பேரணி ராணுவ மருத்துவமனை பகுதியில் நிறைவு பெற்றது. வாரிய சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி, பூரணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ