உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  விழிப்புணர்வு பேரணி

 விழிப்புணர்வு பேரணி

குன்னுார்: குன்னுாரில் 'தி ஐ பவுண்டேஷன்' சார்பில் 'கிளோகோமா' விழிப்புணர்வு பேரணி நடந்தது. மவுண்ட் ரோடு ஐ பவுண்டேஷன் பகுதியில் துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., ரவி துவக்கி வைத்தார். பேரணி பஸ் ஸ்டாண்ட் வழியாக தீயணைப்பு நிலைய வளாகத்தை அடைந்தது. பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவிகள் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்று நோய் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாரதிய வித்யா பவன் நீலகிரி கேந்திரா தலைவர் கனகலதா முகுந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஏற்பாடுகளை டாக்டர் பிரியங்கா, மருத்துவமனை ஊழியர்கள் பாபு, விமல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தி ஐ பவுண்டேஷனில், வரும் 31ம் தேதி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. அதனை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை