உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கழிவு தேங்குவதால் துர்நாற்றம்; சுகாதார சீர்கேடு

கழிவு தேங்குவதால் துர்நாற்றம்; சுகாதார சீர்கேடு

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம், கூட்டுறவு பண்டகசாலை எதிரே உள்ள கால்வாயில், கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.இப்பகுதியில், பண்டக சாலை, அரசு மருந்தகங்கள் மற்றும் கடைகள் அமைந்துள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் குடியிருப்பு காம்பாய் கடை இடையே, அதிக வீடுகள் உள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில், சாலை ஒட்டி, தேநீர் கடை மற்றும் ஹோட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேற ஏதுவாக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, கனமழையிலும் அடித்து செல்லாதவாறு, கால்வாய் அடைபட்டு, கழிவு நீர், கால்வாயில் தேங்கியுள்ளது.இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம், 'பிளிச்சிங் பவுடர்' வீசுவதுடன், கால்வாயை உடனடியாக தூர்வாரி கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ