குன்னுார் அருகே டீ கடையில் பொருட்களை சூறையாடிய கரடி
குன்னுார், ;குன்னுார் ஆர்செடின் பகுதியில் கூரையை சேதப்படுத்தி, டீ கடைக்குள் புகுந்த கரடி பொருட்களை சேதம் செய்தது.குன்னுார் பகுதிகளில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் ஆர்செடின் பகுதியில் லிஜிகுமார் என்பவரின் டீ கடை கூரையை சேதப்படுத்தி உள்ளே புகுந்து கரடி, சர்க்கரை, மாவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சேதம் செய்தது.தொடந்தது, அருகில் உள்ள மளிகை கடை கதவுகளை உடைத்தது. சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. மக்கள் கூறுகையில்,'ஏற்கனவே இங்கு கூண்டு வைக்கப்பட்ட போது, கரடி சிக்காததால், வனத்துறையினர் கூண்டை எடுத்து சென்றனர்.தற்போது, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடும் கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.