உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளி சத்துணவு கூடத்தை சூறையாடிய கரடி

அரசு பள்ளி சத்துணவு கூடத்தை சூறையாடிய கரடி

கோத்தகிரி; கோத்தகிரி கக்குச்சி அரசு பள்ளி சத்துணவு கட்டடத்தை கரடி சூறையாடியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோத்தகிரி கக்குச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சில நாட்களாக, பள்ளி வளாகத்தில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக, இரவு நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் கரடிகள் சத்துணவு கூட கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து, அரிசி, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட, உணவு பொருட்களை சூறையாடி வருகின்றன. இதனால், பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகம், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் கூறுகையில், 'வனத்துறையினர் பள்ளி வளாகத்தில் சுற்றி திரியும் கரடிகளை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி