கேபிள் ஒயரில் சிக்கிய பைக்; அந்தரத்தில் பறந்த இளைஞர்
குன்னுார்; குன்னுார் வெலிங்டன், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் தனியார் 'இன்டர்நெட் பைபர் கேபிள்கள்' கட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு ஓட்டுப்பட்டறை -கரடிபள்ளம் சாலையில், தொங்கி கிடந்த இன்டர்நெட் பைபர் கேபிளில் சிக்கி, பைக்கில் வந்த நபர் தடுமாறி கீழே விழுந்தார். சிறு காயங்களுடன், உயிர் தப்பினார். 'மின்கம்பங்களில் தனியார் கேபிள்கள் கொண்டு செல்ல கூடாது,' என விதி இருந்தும், அதனை மீறி, பைபர் கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றும்போதும், சிக்கி பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்வு காண வேண்டும்.