பைக் திருட்டு; இருவர் கைது
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் முட்டிக்குளங்கரை சந்திப்பில், கடந்த மாதம் 23ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்தவரின் பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். புகாரின் பேரில், ஹேமாம்பிகா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஐ. ஷபீப் ரஹ்மான் தலைமையிலான போலீஸ் படையினர், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தினர். இதில், பைக்கை திருடியது கோவை சூலுார் காரணம்பேட்டைியைச் சேர்ந்த சந்தோஷ் பாபு, 18, பள்ளபாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷன், 18, ஆகியோர் என்பதும், இவர்கள் மீது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை நேற்று கைது செய்தனர்.