உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலையில் காட்டெருமைகள் உலா; மக்கள் நடந்து செல்ல அச்சம்

காலையில் காட்டெருமைகள் உலா; மக்கள் நடந்து செல்ல அச்சம்

குன்னுார்: அருவங்காடு ஜெகதளா சாலையில் காலை நேரத்தில் செல்லும் காட்டெருமைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.அருவங்காடு பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரத்தில், அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பு வழியாக ஜெகதளா சாலை, விநாயகர் கோவில், கலைமகள் தெரு வழியாக உதயம்நகரில் உலா வருகின்றன.நேற்று காலை காட்டெருமைகள் அணிவகுத்து அருவங்காடு சென்றது. போக்குவரத்து நெரிசலால், காட்டெருமைகளால் செல்ல முடியவில்லை. பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் அவ்வழியாக நடந்து செல்ல அச்சமடைந்தனர். மக்கள் கூறுகையில், 'காலை நேரத்தில் உலா வரும் காட்டெருமைகளை கட்டபெட்டு வனத்துறையினர் கண்காணித்து, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ