மேலும் செய்திகள்
உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்
01-Sep-2024
பந்தலுார் : நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், ரத்ததான முகாம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. நிர்வாகி அண்ணாதுரை வரவேற்றார்.கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்து, 'ரத்த தானம் வழங்குவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றி அனைவரும் அறிய வேண்டும். இளைஞர்கள் ரத்த தானம் செய்வதற்கு முன் வர வேண்டும்,' என, வலியுறுத்தினார். நிகழ்ச்சியில், கூடலுார் அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், 30 பேர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். நிர்வாகிகள் கார்த்திக், ஷாஜி, கூடலுார் ரத்த வங்கி பணியாளர்கள் மஞ்சு, வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
01-Sep-2024