மழையால் படகு சவாரி நிறுத்தம்
குன்னுார்: குன்னுாரில் மழையின் காரணமாக சிம்ஸ்பூங்காவில், படகு சவாரி நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது. குன்னுாரில் நேற்று பலத்த காற்று வீசியதுடன் அவ்வப்போது கன மழையும் பெய்தது. தற்போது 2வது சீசன் களைகட்டியுள்ள நிலையில், மழையின் காரணமாக சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சிம்ஸ் பூங்காவில் உள்ள பூங்கா ஏரி பூட்டப்பட்டு, படகு சவாரி நிறுத்தப்பட்டது. படகு இல்லம், சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டது . தோட்டக்கலை துறையினர் கூறுகையில், மழை நின்ற பிறகு படகு சவாரி துவக்கப்படும், என்றனர்.