மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
28-Sep-2024
ஊட்டி: ஊட்டியில் இன்று துவங்கும் புத்தக திருவிழாவில், 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 3 வது புத்தக திருவிழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று, 18 ம் தேதி துவங்கி இம்மாதம், 27 ம் தேதி வரை நடக்கிறது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரசுதுறைகள் சார்ந்த, 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.புத்தக திருவிழா நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை, 10:00 மணிமுதல் இரவு, 7:00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மாலயா, கலை மாமணி ஞானசம்பந்தம், பட்டி மன்ற பேச்சாளர் ராஜா, புஷ்பவனம் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனர்.நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுதுறை, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், உணவரங்கங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. அனைவக்கும் அனுமதி இலவசம்.
28-Sep-2024