மேலும் செய்திகள்
13வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்
12-Sep-2024
ஊட்டி: ஊட்டி அருகே மூளைச்சாவு அடைந்த கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்த அர்ஜூணன், 62, கூலி தொழிலாளி, மனைவி சரோஜா, மகன் கார்த்தி உள்ளனர். கடந்த, 24ம் தேதி தேயிலை தோட்ட வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய அர்ஜூணன், திடீரென மயங்கி விழுந்தார். ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அர்ஜூணன் தலையில் ஏற்பட்ட ரத்த கசிவால் மூளைச்சாவு அடைந்து விட்டார். 'சிகிச்சை அளித்தாலும் பலனில்லை' என, தெரிவித்துள்ளனர். மூளைச்சாவு அடைந்த அர்ஜூணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தார், உறவினர்கள் முன்வந்தனர்.இதையடுத்து, நேற்று, காலை அறுவை சிகிச்சையில் எடுக்கப்பட்ட ஒரு சிறுநீரகம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் 'கிரீன் கார்ட்' ஆம்புலன்ஸ் மூலம், பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.இதையடுத்து, உடல் உறுப்புகள் தானம் செய்த அர்ஜூணனின் உடலுக்கு, அரசு மருத்துவமனையில் கலெக்டர் லட்சுமிபவ்யா, மருத்துவ கல்லுாரி டீன் கீதாஞ்சலி, எஸ்.பி.,நிஷா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, நஞ்சநாடு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
12-Sep-2024