உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரங்களின் கிளை வெட்டும் பணி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரங்களின் கிளை வெட்டும் பணி

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் உயரமான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வருகிறது.நீலகிரியில் அபாயகரமான மரங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தால், சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு அபாய மரங்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவினுள் உள்ள சாலையில் வானுயர்ந்த ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் மிகவும் தாழ்வாக உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இந்த மரங்களின் கிளைகளை வெட்டும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி