பழுதடைந்த விளக்கு; சீரமைத்தால் பயன்
கூடலுார்; கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து, ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. இப்பகுதியில், காலை, மாலை பீக் - ஹவர் நேரங்கள், விடுமுறை நாட்களில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், போலீசார் சிக்னல் அமைத்து வாகன போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். இப்பகுதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கூடலுார் நகராட்சி சார்பில் ஐமாஸ் மின் விளக்கு அமைத்துள்ளனர். இரவு நேரங்களில், இதன் வெளிச்சம் இப்பகுதி முழுவதும் பயனுள்ளதாக உள்ளது. கடந்த சில வாரங்களாக ஐமாஸ் விளக்கு பழுதடைந்து பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் இரவில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'பழுதடைந்த, ஐமாஸ் விளக்கை உடனடியாக சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.