உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்கம்

நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்கம்

குன்னுார்; குன்னுார்- அதிகரட்டி -ஊட்டி வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குன்னுார்- அதிகரட்டி -ஊட்டி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சமீபத்தில், நிறுத்தப்பட்டு அதிகரட்டி கிராமத்திற்கு, 'மகளிருக்கு விடியல் பயணம்' என, மாற்றப்பட்டது. இதனால், ஊட்டி மற்றும் குன்னுாருக்கு நேரடியாக சென்று வர முடியாமல் மக்கள் பாதித்தனர். இதனால், கடந்த, 6ம் தேதி குன்னக் கொம்பை அருகே மக்கள் பஸ் சிறை பிடிப்பு போராட்டம் நடத்த குவிந்தனர்.இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து கழக மேலாளர் ஜெகநாதன் தலைமையில் ஊட்டியில், பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி, இரு நாட்களாக, ஊட்டி - அதிகரட்டி-குன்னுார் வழித்தடத்தில் மீண்டும் பழைய படி பஸ் இயக்கப்பட்டது. இதனால், சின்ன கரும்பாலம், கரும்பாலம், சேலாஸ், கெந்தளா, கோடேரி, குன்னக்கம்பை, மணியாபுரம், நெடிகாடு, முட்டிநாடு, பாலகொலா, தாம்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை