உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதர் சூழ்ந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

புதர் சூழ்ந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து அத்திக்குன்னா வழியாக தேவாலா மற்றும் கூடலூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. அத்திமாநகர் முதல் தேவாலா வரை சுமார் 4- கி.மீ., தூரம் வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள நிலையில், சாலையின் இரண்டு பகுதிகளிலும் புதர்கள் சூழ்ந்து வளர்ந்து காணப்படுகிறது. குறுகிய சாலையில் புதர்கள் சூழ்ந்து வருவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமலும் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் சாலையை யானைகள் கடந்து செல்லும் நிலையில், சாலையோர புதர்களில் வனவிலங்குகள் நிற்பது தெரியாமல், நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் புதர்களை வெட்டிய அகற்றி பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை