இடைத்தேர்தல்: தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க உத்தரவு
ஊட்டி; 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி நீலகிரியில் பணியாற்றும் தொகுதியை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்,' என, தொழிலாளர் துறை அறிவுறுத்தி உள்ளது. குன்னுார் தொழிலாளர் உதவி கமிஷனர் ( அமலாக்கம்) தாமரை மணாளன் அறிக்கை: இம்மாதம், 5ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு, 135ன் படி இத்தொகுதியில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரம் தொழிலாளர்கள் உட்பட அனைத்து வாக்குரிமை பெற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.அதன்படி, இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளை சார்ந்த தொழிலாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு, 5ம் தேதி, நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். விடுப்பு தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களை, 9952080800 , 9840456912 மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.