மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
1 minutes ago
யானையிடம் உயிர் தப்பியவர் கால் முறிவு
5 minutes ago
ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் துவக்கம்
52 minutes ago
ஊட்டி: பராமரிப்பு பணிக்காக பைக்காரா அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊட்டி - கூடலுார் சாலையில், 25 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் அருவி உள்ளன. சுற்றுலா வளர்ச்சி கழக சார்பில் பைக்காரா அணையில் படகு சவாரி நடந்து வருகிறது. பைக்காரா அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள அருவியை சுற்றுலா பயணியர் பார்த்து செல்கின்றனர். அருவியை சுற்றியுள்ள தடுப்புவேலிகள், புல் மைதானங்களை சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 17ம் தேதி முதல் பைக்காரா அருவி தற்காலிகமாக மூடப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'பணிகள் முடியும் வரை சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.
1 minutes ago
5 minutes ago
52 minutes ago