உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை விவசாய தோட்டம் அமைக்க அழைப்பு

இயற்கை விவசாய தோட்டம் அமைக்க அழைப்பு

பந்தலுார்: இயற்கை வீட்டு தோட்ட விவசாயத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பந்தலுார் நுாலகத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில், இயற்கை வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நுாலகர் அறிவழகன் வரவேற்றார். அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் தலைமை வகித்து பேசுகையில்,''நாம்பணத்தை கொடுத்து நோய்களை வாங்கும் நிலையில், வீட்டு வளாகங்களில் இயற்கை முறையிலான வீட்டு தோட்டங்களை உருவாக்கலாம். இதன் மூலம் எந்த பக்க விளைவுகள் இல்லாமல், தரமான உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும், இவற்றை விற்பதன் மூலம் வருவாயும் கிடைக்கும். தோட்டக்கலைத்துறை மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்படும்,'' என்றார்.கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், வீட்டு வளாகங்களில் மற்றும் மொட்டை மாடிகளில், வீட்டு தோட்டம் உருவாக்குவதன் மூலம், தரமான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய இயலும்,'' என்றார். நிகழ்ச்சியில் வாசகர்கள்பங்கேற்றனர். அம்பிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ