உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாவரவியல் பூங்காவில் கேலா லில்லி மலர் செடிகள்

தாவரவியல் பூங்காவில் கேலா லில்லி மலர் செடிகள்

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில், கோடை விழாவிற்காக, 2,500 தொட்டிகளில் லில்லியம் மலர் செடிகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே, 16ம் தேதி மலர் கண்காட்சி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை ஒட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 270 ரகங்களில், பல்வேறு வகையான, 5 லட்சம் மலர்கள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஊதா உட்பட ஐந்து வண்ணங்களில், 2,500 தொட்டிகளில், 10,000 கேலா லில்லியம் மலர் செடிகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் மலர்கள் பூத்தவுடன் இந்த மலர் தொட்டிகளை கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்க பூங்கா நிர்வாக முடிவு செய்துள்ளது. தற்போது, பூங்கா நர்சரியில் இந்த கேலா லில்லி மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை