மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
18-Jun-2025
மல்லிகை செடிகளை தாக்கும் மஞ்சள் நோய்
20-Jun-2025
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், வீடுகள் தோறும் மஞ்சள் பை வழங்கும் திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மட்கும், மட்காத குப்பைகள் சேகரித்து, மறுசுழற்சி மேலாண்மை மையத்தில் கொண்டு சென்று தரம் பிரிக்கப்படுகிறது. இதே போல, சுற்றுப்புற பகுதிகளை துாய்மையாக வைக்கவும், முறையாக குப்பைகளை அகற்றவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே உத்தரவின் பேரில், வாரியத்தில் உள்ள, 7 வார்டுகளிலும் மஞ்சள் பை வழங்கும் பணி நடந்தது.நிகழ்ச்சியில், முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட தன்னார்வலர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் கூறுகையில், ''கடந்த, 2001ல் முதன்முறையாக வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கர் என்பவர் திடக்கழிவு மேலாண்மை உரம் தயாரிக்கும் மையத்தை கொண்டு வந்தார். ''அப்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட நிலையில், பிரபலமாக இருந்த மஞ்சள் பை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் மஞ்சள் பை வழங்கும் திட்டத்தில், 7 ஆயிரம் மஞ்சள் பைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,''என்றார்.
18-Jun-2025
20-Jun-2025