உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இளைஞர் மீது வழக்கு பதிவு

இளைஞர் மீது வழக்கு பதிவு

குன்னுார்; குன்னுார் -மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சென்ற இளைஞர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், மரப்பாலம்--- கல்லாறு இடையே உள்ள பகுதியில், இளைஞர் ஒருவர், பைக் ஓட்டி சென்ற 'வீடியோ' சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், 'கோவை கோட்டை மேடு பகுதியை சேர்ந்த, விவின்கிறிஸ்,21, என்பவர், கடந்த 2024 ஏப்., 22ல், குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் விதிகளை மீறி பைக் ஓட்டினார்,' என்பது தெரியவந்தது. அவர் மீது, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில்,' இளைஞர்கள் சாகசம் செய்வதாக நினைத்து ரயில் பாதைகளில் எக்காரணத்தை கொண்டும் பைக் ஓட்ட கூடாது. விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை