உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரசோலை பிரதான சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்

ஒரசோலை பிரதான சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்

கோத்தகிரி; கோத்தகிரி - கட்டபெட்டு இடையே, ஒர சோலை சாலையில் நாள்தோறும் கால்நடைகள் உலா வருவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கோத்தகிரியில் இருந்து, குன்னுார், ஊட்டி உட்பட, கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இச்சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஒரசோலை சந்திப்பில் இருந்து, பாண்டியன் பார்க் வரை வளைவுகள் இல்லாமல் சமமாக உள்ளது. இதனால், வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. தவிர, அப்பகுதியில் அரசு போக்குவரத்து கழக கிளை அமைந்துள்ளதால், போக்குவரத்து துறை ஊழியர்களின் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. சமீப காலமாக, கால்நடைகள் சாலையில் நடமாடுவது அதிகரித்துள்ளது. இதனால், விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில், இதே பகுதியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கால்நடைகள் சாலையில் இடையூறாக வந்ததால் விபத்து ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி