மேலும் செய்திகள்
உலா வரும் கால்நடைகள்; வாகனங்களை இயக்க சிரமம்
14-Sep-2024
ஊட்டி : ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், வணிக நிறுவனங்கள், மார்க்கெட், அத்தியாவசிய கடைகள் அதிகளவில் உள்ளன. பொதுமக்களின் நடமாட்டம் உள்ள இப்பகுதி சாலையில், நாள்தோறும் கால்நடைகள் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஒய்வெடுத்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதுடன், விபத்து அபாயம் ஏற்படுத்துகிறது. மக்கள் கூறுகையில், 'நகராட்சி நிர்வாகம் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து வைத்து, சம்மந்தப்பட்ட உரிமையாளர்களை அழைத்து அதிகபட்ச அபராதம் விதித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும்,' என்றனர்.நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா கூறுகையில், ''ஊட்டி நகரில் எங்கு பார்த்தாலும் கால்நடைகள் சுற்றித்திரிவதாக தொடர்ந்து புகார் வருகிறது. சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களை அழைத்து அதிகபட்ச அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
14-Sep-2024