உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மத்திய அரசு ஒதுக்கிய பூங்கா நிதி; மாநில அரசு இடம் மாற்றியதற்கு கண்டனம்

மத்திய அரசு ஒதுக்கிய பூங்கா நிதி; மாநில அரசு இடம் மாற்றியதற்கு கண்டனம்

கூடலுார்; கூடலுாரில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு, மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகி அம்சா தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, மா.கம்யூ., ஏரியா செயலாளர் சுரேஷ், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பாதுஷா, அப்துல் ரசாக், சாபிக் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், எம்.எல்.ஏ., ஜெயசீலன் பேசுகையில், ''கூடலுார் அருகே பொன்னுார் பகுதியில்,பூங்கா அமைக்க கடந்த நவ., மாதம் மத்திய அரசு, 70.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், மாநில சுற்றுலாத்துறை தற்போது இடமாற்றம் செய்துள்ளது.மத்திய அரசு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து நிதி ஒதுக்கிய நிலையில், அதனை இடமாற்றம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம் நடத்தி, இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் புகார்கள் அனுப்பிய நிலையில், இதுகுறித்து கண்டு கொள்ளாதது மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு அறிவித்தபடி, பொன்னுார் பகுதியில் மலர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், லியாகத் அலி, இளஞ்செழியன், சேகர் (தி.மு.க.,) பத்மநாதன், ராஜா தங்கவேல், செல்வகுமார் (அ.தி.மு.க.,) கவுன்சிலர் சையத் அனுாப்கான், புவனேஸ்வரன்(வி.சி.,), ஹனிபா (மு.லீக்), சரவணன் (த.வெ.க.,), முகமது கனி (இ.கம்யூ.,), மணி (தே.மு.தி.க.,), கார்த்திக் (நா.த), ஷாஜகான் (எஸ்.டி.பி.ஐ.,), அகமது யாசின் (மக்கள் இயக்கம்), ஆனந்தராஜ், ராஜேந்திரன் (தாய்தான் திரும்பிய கூட்டமைப்பு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ