உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சந்தனமலை முருகன் கோவில் தேர் திருவிழா

சந்தனமலை முருகன் கோவில் தேர் திருவிழா

கூடலுார்; கூடலுார் ஓவேலி கிளன்வான்ஸ் சந்தனமலை ஸ்ரீ முருகன் கோவில், 42வது ஆண்டு தேர் திருவிழா துவங்கியது. இரவு, 9:00 மணிக்கு பார்வுட் சிவன் கோவிலில் இருந்து, தேர் ஊர்வலம் துவங்கி, முக்கிய சாலை வழியாக சென்று கோவிலில் நிறைவடைந்தது. தேர் ஊர்வல நாளில், காலை முருகனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், 8:00 மணிக்கு பங்குனி உத்திர பூஜையும், பகல், 12:00 மணிக்கு உச்சகால பூஜைகள் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு கோவிலை சுற்றி தேர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி