ஊட்டி பள்ளியில் செஸ் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஊட்டி; ஊட்டி கிரசன்ட் கேசில்பப்ளிக் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஊட்டி கிரசன்ட் கேஸ்டல் பப்ளிக் பள்ளியில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டியில்,16 பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பள்ளி தாளாளர் உமர் பரூக், மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.