மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு : கலெக்டர் உத்தரவு
07-May-2025
பந்தலுார் : நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பந்தலுாரில் நடத்தின.காந்தி சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத் வரவேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து, 'குழந்தைகள் உரிமைகள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து,' விளக்கம் அளித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தவமணி, கோமதி, 'ஆல் தி சில்ட்ரன்' தன்னார்வ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேசினர்.பந்தலுார் ரெப்கோ வங்கி மேலாளர் விஸ்வநாதன், 'பொது தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி திட்டங்கள் மற்றும் சுய வேலை வாய்ப்புகள்,' குறித்து பேசினர்.
07-May-2025