உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீன தற்காப்பு கலையான ‘தாய்சி’ பயிற்சி முகாம்

சீன தற்காப்பு கலையான ‘தாய்சி’ பயிற்சி முகாம்

குன்னுார்: குன்னுாரில் சீன தற்காப்பு கலையான ‘தாய்சி’ பயிற்சி முகாமில் மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குன்னுாரில், ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் தாய்சி’ சார்பில், இரண்டு நாள் சிறப்பு தாய்சி தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், அமைப்பின் கிராண்ட்மாஸ்டர் வேலப்பன் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு தாய்சி கலையின் நுணுக்கங்களை நேரில் கற்பித்து பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில், மாணவர்கள், அருண்குமார், பசுவையா, ராஜ்குமார், லிங்கராஜன், ஜீவாகுமார், பவதாரணி, கமலேஷ்வரன், மோகன், சுமி, டோனல் டென்சி, பாபு, தர்ஷன், அமித் கனாத்ரா, பரிஷத் லுப்லே உட்பட பிற மாவட்டங்களை சேர்ந்த பலர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கராத்தே பள்ளி இயக்குனர் ரென்சி பழனிவேல் மற்றும் சிறப்பு பயிற்சியாளர் சென்சாய் இணையத்துல்லா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை