கத்தோலிக்க ஆலயத்தில் கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி
ஊட்டி; ஊட்டியில் உள்ள முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. இரவு, 11:00 மணி முதல், 12:00 மணிவரை பாடல்கள் பாடப்பட்டன. பின், 12:00 மணிக்கு பங்கு குரு செல்வநாதன் குழந்தை ஏசு சுரூபத்தை கையில் ஏந்தி ஆலயத்தின் முன்புறம் இருந்து பீடத்தை நோக்கி எடுத்து வந்தார். தொடர்ந்து, பீடத்தில் வைத்து புனித படுத்தி உதவி பங்கு குரு டிக்சன் குழந்தை ஏசு சுரூபத்தை மாட்டு தொழுவத்திற்கு எடுத்து சென்று வைத்து தூபமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து ஆடம்பர திருப்பலி நடந்தது. முன்னதாக வெள்ளை அமைதி கேண்டல் ஏற்றிவைக்கப்பட்டது. ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து ஒவ்வொருவரும் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு குருக்கள் வேதியர் நாதன் மற்றும் இளைஞர் குழு செய்திருந்தனர்.