உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைபாதையில் மேகமூட்டம்

மலைபாதையில் மேகமூட்டம்

குன்னுார்; குன்னுாரில் மேகமூட்டம் நிலவுவதால் மலைபாதையில் வாகனங்கள் ஓட்ட சிரமம் ஏற்படுகிறது. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில், சாரல் மழை, மேகமூட்டம் என மாறுபட்ட கால நிலை நிலவுகிறது. இந்நிலையில், நேற்று காலை குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன், கடும் குளிர் நிலவி யது. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையிலும், மேகமூட்டம் நிலவு வதால், வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு இயக்கப்பட்டது. மித வேகத்தில் வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தினர். இந்த காலநிலையில், தேயிலை தோட்டங்களில் நிலவும் மேகமூட்டத்துக்கு இடையே, 'செல்பி;போட்டோ' எடுக்க சுற்றுலா யணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி