உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மசினகுடி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

மசினகுடி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

கூடலுார்: மசினகுடி, கார்குடி அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். முதுமலை, மசினகுடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று முன்தினம், பார்வையிட்டு மாணவர்களின் கல்வித்திறன், வகுப்பறைகள், உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, கார்குடி அரசு உண்டு உறைவிட துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி, காரைக்குடி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி