கலெக்டர் ஆய்வு
குன்னுார்: குன்னுார் வி.பி., தெரு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா, குழந்தைகளின் வருகை, எடை மற்றும் உயரம் குறித்து கேட்டறிந்தார். துாய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிட கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். உமரி காட்டேஜ் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளின் வருகை, சிகிச்சை குறித்தும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை, மருந்துகளின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வு மாணவர்களின் கல்விதிறன், அவர்களுக்கு வழங்கப்படும் காலை, மதிய உணவு திட்டங்கள் குறித்து விசாரித்தார். ‘நகராட்சி அலுவலகத்தில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் எவ்வித தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். குன்னுார் சப்-–-கலெக்டர் காஞ்சன் சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.