உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைக் விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

பைக் விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

குன்னுார் : குன்னுார் அருவங்காடு அருகே பைக் விபத்தில் கல்லுாரி மாணவர் பலியானார்.குன்னுார் அருவங்காடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரின் மகன் யஸ்வந்த், 24. பெங்களூரு தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். தசரா விடுமுறைக்காக கடந்த, 3ம் தேதி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் அருவங்காட்டில் இருந்து, ஜெகதளாவை சேர்ந்த இவரது நண்பர் அஜய் என்பவருடன் பைக்கில் பாய்ஸ் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு சாலை பகுதியில் நிறுத்தி பொருட்களை இறக்கி கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே யஸ்வந்த் உயிரிழந்தார்.அஜய், ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, கேத்தி பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் நெல்சன், 33 என்பவர் மீது அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ