சட்ட விரோத காட்டேஜ்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு; புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோத காட்டேஜ்கள் மற்றும் விடுதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இணங்க, நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும், காட்டேஜ்கள், லாட்ஜ்கள், ரிசார்ட்ஸ் மற்றும் வீடுகள் ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி கமிஷனர், சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மேற்கண்ட கட்டடங்கள் குறித்து புகார்கள் இருப்பின், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, 94427-72709 என்று ஹெல்ப்லைன் எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதே எண்ணிற்கு 'வாட்ஸ்ஆப்' வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.