உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

 காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: 'தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊட்டியில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை, மத்திய அரசு மாற்றி, 125 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், 'இந்த திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தி, காங்., கட்சியினர், ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, கலெக்டரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்., மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஊட்டி நகர தலைவர் நித்ய சத்யா, வட்டார தலைவர் ராமச்சந்திரன், கோத்தகிரி வட்டார தலைவர் சில்லபாபு உட்பட பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை