மேலும் செய்திகள்
அதிகாலை பனி பொழிவு; பசுந்தேயிலை மகசூல் பாதிப்பு
08-Mar-2025
கூடலுார்; கூடலுாரில் தொடரும் கோடை மழையில், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதியில் நடப்பாண்டு கோடை மழை ஏமாற்றி வந்த நிலையில், வறட்சியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பாண்டியார்,புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகள், நீரோடைகளில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போதிய பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் சார்பில், மக்களுக்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்யவும் சிரமப்பட்டனர். பல பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை தொடர்வதால், வறட்சியின் தாக்கம் குறைந்திருப்பதுடன், நீர்நிலைகள் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. பொதுமக்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் சப்ளை செய்வதில், சிரமம் குறைந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழை தொடரும் பட்சத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பாசன வசதிக்கான, தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது,' என்றனர்.
08-Mar-2025