உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அடமான நகை பாதுகாப்பில் கூட்டுறவு வங்கி செயலர்கள் உஷாராக இருக்கணும்! கட்டடம்,கேமரா செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உத்தரவு

அடமான நகை பாதுகாப்பில் கூட்டுறவு வங்கி செயலர்கள் உஷாராக இருக்கணும்! கட்டடம்,கேமரா செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உத்தரவு

ஊட்டி: நீலகிரியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகை கடன், 300 கோடி ரூபாயை தாண்டியதால், வங்கிகளின் கட்டட பாதுகாப்பு, சி.சி.டி.வி., கேமரா கண் காணிப்புகளை பலப் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுாகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வங்கிகளில், விவசாயிகளுக்கு, பயிர் கடன், நகை கடன், கறவை மாட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது.

ரூ. 300 கோடியை தாண்டிய நகை கடன்

விவசாயம் சம்பந்தமாக நகை கடன் பெற பெரும்பாலான விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி கடன் பெறுகின்றனர். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன், அக்., இறுதி கணக்குப்படி, 300 கோடி ரூபாயை எட்டி உள்ளது. இந்நிலையில், தங்க நகைக்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், வங்கியில் அடமான வைக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கி செயலர்களுக்கு அறிவுரை

இந்நிலையில், 'அந்தந்த வங்கி செயலர்கள் விவசாயிகள் வைத்துள்ள நகைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், வங்கி கட்டடத்தில் நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் வசதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சி.சி.டி.வி., கேமரா கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும். பழுதான கேமராக்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். ரோந்து போலீசாரின் உதவியுடன் இரவு நேர பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும்,' என, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா கூறுகையில்,''மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கட்டடத்தின் கட்டமைப்பு வசதி, சி.சி.டி.வி., கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும். பழுதான கேமராக்களை உடனடியாக சரி செய்து வங்கி கட்டடத்தின் உறுதி தன்மை உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை