கூட்டுறவு சங்க ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவு சங்க ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜ், பொருளாளர் மோதிலால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், 'முதன்மை சங்கங்களுக்கு நுகர்வு செய்யப்படும் ரேஷன் பொருட்களின் எடையை குறைக்காமல், சரியான எடையில் வழங்குவதை, விற்பனை முனையத்தில் உறுதி செய்ய வேண்டும்.ரேஷன் பொருட்களை, கைவிரல் ரேகை பதிவு மற்றும் கருவிழி பதிவு ஆகிய, இரண்டு முறைகளிலும், வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணி சுமையைகருத்தில் கொண்டு எடையாளர் ஒருவரை அனுமதிக்க வேண்டும்; அதுவரை, வெளியில் இருந்து உதவியாளரை பணியமர்த்த வேண்டும்.மேலும், விடுமுறை நாளில் பணி மேற்கொள்வதை முற்றிலும் கைவிடுவதுடன், இதே பணி மூப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.விற்பனையாளரும், சங்க சிற்றெழுத்துரும், ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிப்பதுடன், ஊழியர்களை அருகில் உள்ள சங்கங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.