உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டிகள்

கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டிகள்

ஊட்டி; ஊட்டி அண்ணா கலையரங்கில் கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி நடந்தது. நீலகிரியில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று துவங்கியது. ஒரு வாரம் நிகழ்ச்சியில், கருத்தரங்கம், மரக்கன்று நடுதல், பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், உறுப்பினர் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அண்ணா கலையரங்கில் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் துவக்கி வைத்தார். இதில்,கேரம், செஸ், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி