மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் பலி
19-Oct-2025
அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது
16-Oct-2025
ஊட்டி: -கிண்ணக்கொரை கிராமத்தில் நடந்த கோமாதா பூஜையில் பசுக்களை வளர்த்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. விழாவுக்கு, ரவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு. பசு மாடுகளுக்கு கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து, சத்சங்கம், பஜனை பாடல்களுடன், முருகப்பெருமான் வேலுக்கு, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் ஆத்துார் பாலாஜி சிறப்புரை ஆற்றினார். குரு பிரகாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். விழாவில், 'நீலகிரி மாவட்டத்தில் கடந்த தலைமுறைகளில் ஏராளமான பசு மாடுகள் இருந்துள்ள நிலையில், தற்போது மாடுகளின் எண்ணிக்கையுடன், மாடு வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சமீப காலமாக, விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருட்களால் நிலம் நச்சுத்தன்மை ஏற்பட்டு, மண்ணின் தரம், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. மேலும், ஓடைகள் உட்பட நீர் ஆதாரங்கள் ரசாயன பொருட்களால் மாசடைந்து, நோய் தொற்று உருவாகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டு பசு மாடு வளர்ப்பதை அதிகரிக்க செய்து, வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வி .எச்.பி., கோட்ட செயலாளர் மகேஷ் குமார், மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பசு மாடுகளை வளர்த்து, நீர்நிலை பாதுகாக்க மக்கள் முன் வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில், பெள்ளியப்பன், ஸ்ரீநாத், கணேசன், வெங்கடேஷ், சிங்கன் சாது, சந்திரசேகர், அஜித் மற்றும் சவிதா போஜன் உட்பட பலர் பங்கேற்றனர். விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
19-Oct-2025
16-Oct-2025