மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
13 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
13 hour(s) ago
ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரு நாட்களில், 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.வார இறுதி நாட்கள் இருநாட்கள் விடுமுறை தினங்களாக இருந்ததால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துள்ளனர். பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள் அங்கு நின்று செல்பி, போட்டோ எடுத்தனர். மேலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொட்ட பெட்டா காட்சி முனை, சூட்டிங் மட்டம், பைன்சோலை ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் சென்று இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகள் நிரம்பின. வாகனங்களால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு நாட்களில், 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்துள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago