மேலும் செய்திகள்
கடையை உடைத்து திருட்டு; வடமாநில தொழிலாளி கைது
18-Sep-2025
ஊட்டி; ஊட்டி டீ கடையில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. ஊட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், கீழ் கோடப்பமந்து பகுதியில் டீ கடை நடத்தி வந்தார். கடையில் காலி சிலிண்டரை மாற்றும் போது, எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டு அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரிந்தது. தீ விபத்தை அடுத்து, ஊட்டி --கோத்தகிரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து , நிலைய அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். அங்கிருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக தீயணைப்பு வீரர்களும் உயிர்த்தப்பினர் அதன் பின் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊட்டி - கோத்தகிரி சாலையில் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18-Sep-2025