உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கட்டட கழிவால் பாதிப்பு

 கட்டட கழிவால் பாதிப்பு

கோத்தகிரி: கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து, பிரதான சாலையை அடுத்து, கோட்டஹால் வழியாக குறுக்கு சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை, பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக, நகர பகுதியில் இருந்து வெளியேறும் குப் பைகள் மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தவிர, இங்கு கொட்டப்படும் உணவு கழிவு களை உண்ணுவதற்காக, வன விலங்குகள் சாலையில் நடமாடுவதால், மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை