உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் பாதிப்பு

சாலையோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் பாதிப்பு

குன்னுார்; குன்னுார் 'ஆப்பிள்-பீ' சாலையில் நிறுத்தும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. குன்னுார் ஆப்பிள்-பீ சாலை, 'சப்ளை டிப்போ' உட்பட சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இங்குள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இவ்வழியாக செல்கின்றனர். மாணவர்களை அழைத்து வரும் பெற்றோரின் கார்கள் நாள் தோறும் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களை அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி