உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் தடுப்பு இல்லாததால் பாதிப்பு

சாலையோரம் தடுப்பு இல்லாததால் பாதிப்பு

பந்தலுார், ;பந்தலுார் அருகே மாங்கம்வயல், சாலை ஓரத்தில் தடுப்பு இல்லாததால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில் இருந்து மாங்கம்வயல் வழியாக கொட்டாடு, பாலாவயல், கடலக்கொல்லி, பெக்கி, பிதர்காடு, பாட்டவயல், வெள்ளேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்பட்டதால், பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமீபத்தில் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், மாங்கம்வயல் பகுதியில், சாலையை ஒட்டி பாயும் பொன்னானி ஆற்றின் கரைகள் கடந்த மழையின் போது, இடிந்ததால் இந்த பகுதியில் பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. சாலை அமைத்த போது இதனை ஒட்டி தடுப்பு சுவர் அமைக்க இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியும், ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சாலையை ஒட்டி ஆறு பாயும் நிலையில், தடுப்புகள் ஏதும் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்கள் சற்று நிலை தடுமாறினாலும், ஆற்றில் விழுந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தற்போது, தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, ஆபத்துகளை தடுக்க சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை