‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் சேதம்
ஊட்டி: ஊட்டியில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழைக்கு டி.வி., உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமானது. ஊட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு, 7:00 மணியளவில் கனமழை பெய்தது. சில மணி நேர பெய்த மழையின் போது, திடீரென பலத்த சப்தத்துடன் இடி மின்னல் ஏற்பட்டதால், ஊட்டி நகரில் சில பகுதிகளில், டி.வி., பிரிட்ஜ் உட்பட, 20க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமானது. இதேபோல், மாவட்டத்தில் சில பகுதிகளிலும் ‘எலக்ட்ரானிக்’ பொருட்கள் சேதம் அடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.