உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நெற்பயிர்கள் சேதம்: காட்டு யானைகள் அட்டகாசம்

நெற்பயிர்கள் சேதம்: காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர்: கூடலூர், தொரப்பள்ளி குணில் பகுதி விவசாயிகள் வயல்களில், கோடைகாலத்தில் காய்கறியும், பருவ மழைக்காலத்தில் நெல் பயிரிட்டு வருகின்றனர். நடப்பாண்டு, கோடை மழையை தொடர்ந்து வயல்களில் நெற்பயிர்கள் நடவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று, அதிகாலை இரண்டு காட்டு யானைகள் வயலில் நுழைந்து, நெற்பயிர்களை சேதப்படுத்தியது. அப்பகுதியினர் சத்தமிட்டு யானையை விரட்டினர். நெற்பயிர்களை யானைகள் மிதித்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வனத்துறையினர் ஆய்வு செய்து, யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறுகையில், யானைகள் வயல்களுக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ