பக்காசூரன் மலையில் சேதமான மின்கம்பம்
குன்னுார் : குன்னுார் பக்காசூரன் மலை பகுதியில், உள்ள மின் கம்பம் விழும் அபாய நிலையில் உள்ளது. குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் மலை பகுதியில், டான்டீ குடியிருப்பு உள்ளது. இங்குள்ள பக்காசூரன் மலை மைதானத்தில் அரசு பஸ் நிறுத்தப்பட்டு, பயணிகளை இறக்கி ஏற்றி செல்கின்றனர். இங்குள்ள மின்கம்பம், அடிப்பகுதி துருபிடித்து பல மாதங்களாகிய நிலையில், புதிய மின் கம்பம் மாற்றப்படாமல் உள்ளது. இதனால், மழை காலங்களில் கம்பம் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.